To my limited knowledge, few places in the world can match the unmatched tolerance that citizens of India seem to possesss. While there are plenty of occasions in which the attitude of Indians may seem to border apathy, it even confounds the most hardened cynics as to how this land of diverse language, religion, culture, character and soul functions and flourishes as a singlular entity. There is something in the common man which makes them wise and their benevolence in thought, in spite of everday difficulties never ceases surprise me. It is no wonder that Mahatma Gandhi had his core ideologies based on adherence to non-violence and abhorrence to intolerance.
Here's an article in NYT about the Golden temple in Amritsar.
http://www.nytimes.com/2010/08/30/world/asia/30india.html
Monday, August 30, 2010
Friday, July 23, 2010
The philosophy of giving
The measure of a person is a difficult quality to evaluate. It is not measured by the words uttered but indeed by the worth of it. Stated differently, it is earned, not bestowed. In this article, the Oracle of Omaha, buttressses his words through deeds. A truly worthy role model, not because of the money he makes but because of his strength of character, humility and clarity of thought which is revealed through this insightful piece but most importantly backed by action.
http://money.cnn.com/2010/06/15/news/newsmakers/Warren_Buffett_Pledge_Letter.fortune/index.htm
I can only think of the story of half gold, half flesh mongoose from Mahabharatha. It's not a question of "how much" but it has everthing to do with timing. Valluvar got it spot on.

Friday, July 16, 2010
Can you describe glory?
The glory is being happy. The glory is not winning here or winning there. The glory is enjoying practising, enjoy every day, enjoying to work hard, trying to be better than before.
Just 24 Yrs, this brilliant young man is brimming with wisdom beyond his age. Thanks Rafael, you, along with Roger, are more than just tennis players. You have pierced my heart and made me realize what glory is and I promise to strive for it.
Tuesday, June 29, 2010
மதுராபுரி அம்பிகை மாலை -1
திருவே! விளைந்த செந்தேனே ! வடி இட்ட தெள்ளமுதின்
உருவே! மடப் பிள்ளை ஓதிமமே! ஒற்றை ஆடக பூந்
தருவே! நின் தாமரை தாளே சரணம், சரணம் கண்டாய்
அருவே! அணங்கு அரசே! மதுராபுரி அம்பிகையே!
Sunday, March 7, 2010
இரு பாடல்கள்
மனதிற்கு மிகவும் இனிமையான, ஆனால் அதே நேரத்தில் தரத்தில் மிக சிறந்ததும், காலத்தால் அழியாததுமான இரண்டு தமிழ் திரைப்பட பாடல்கள்.
ஒன்று, தமிழ் திரையுலகின் முதல் நட்சத்திரம் - எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களால் இன்றைய நிலையிலும் மிகவும் வெற்றி பெற்ற திரைப்படத்தில் வருவது.
httphttp://www.youtube.com/watch?v=1LZGwwdGvAA&feature=related
மிகவும் இனிமையான இசை, மிகவும் சுத்தமான உச்சரிப்பு, பிசிறில்லாத குரல், திரு. பாபநாசம் சிவன் அவர்களின் ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தும் பாடல் வரிகள், பாகவதர் அவர்களின் rendition, இவை எல்லாம் சேர்ந்து, இந்தப் பாடல் கேட்பவர்களுக்கு ஒரு மிக சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.
இரண்டு. குடத்திலிட்ட விளக்காக அவ்வளவு பரவலாக அறியப்படாதவர் ஆனால் இசை ஞானத்தில் சற்றும் குறைவில்லாத தமிழ் இசை ஆர்வலர் திரு. ம.ம. தண்டபாணி தேசிகர் அவர்கள் நந்தனார் திரைப்படத்தில், திரு. கோபால கிருஷ்ணா பாரதியார் அவர்களால் ஹரி கதை வடிவத்தில் இயற்றப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்று இருந்த பாடல்.
http://www.youtube.com/watch?v=PMHNk9pxgec&feature=related
இந்த பாடலில் நந்தனாரின் பிராமண எஜமானராக வருவது புகழ் பெற்ற நடிகர் திரு.செருக்களத்தூர் சாமா அவர்கள். புன்னாகவராளி ராகத்தில் அமைந்த இந்த பாடலை கேட்கும் பொழுது மகுடிக்கு மயங்கிய சர்ப்பம் போன்ற உணர்வு ஏற்படுவது இயல்பு.
என்ஜாய்!

Sunday, February 7, 2010
மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதி - 5
நாநாயோகி முனீந்த்ரஹ்ருந்நிவஸதிம் நாநார்த்தஸித்தி ப்ரபாம்
நானபுஷ்பப் விராஜிதந்க்ரியுகலாம் நாராயணே அர்ச்சிதாம்
நாதப்ரம்மயீம் பராத்பரதராம் நாநார்த்ததத்வார்த்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம்
மிகச்சிறந்த முனிவர்கள் மற்றும் யோகிகளின் ஹ்ருதயத்தில் நிறைந்து இருப்பவள் , பலவிதமான ஸித்திகளை அருளிச் செய்பவள் , பற்பல புஷ்பங்களால் திருவடியில் பூஜிக்கபடுபவள், ஸ்ரீமன் நாராயணனின் போற்றுதலுக்குரிய சஹோதரியானவளும், தத்வ ஸ்வருபிணியுமானவளும், நாதப்ரஹ்மாமயமானவளும், ஸ்முத்திரத்தை போன்ற அளவிலா கருணையும் மங்களமும் கொண்ட அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியை நமஸ்கரிக்கிறேன்
மதுரை மாநகர் குடிகொண்டிருக்கும் அம்மா, என்றும் நின் பாதங்கள் அடிபணிந்திட அருள் புரிவாய்.
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வவடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே .
மாத்ரு தேவோ பவ , பித்ரு தேவோ பவ, ஆச்சர்ய தேவோ பவ
Thursday, January 21, 2010
நேரம்...காலம்
சில நேரங்களில் வரும் சிறு கஷ்டங்கள் கூட நமக்கு பெரும் துயரம் போல தெரிகிறது. கஷ்டம் வரும் நேரங்களில் இந்த உலகம் நமக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தி விட்டது போலவும் , சந்தோஷம் வரும் நேரத்தில் நாம் அதற்காக பெரிதும் முயற்சித்து அது நமக்கு கிடைத்ததில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லாதது போலவும் தோன்றுகிறது. நம்மால் நினைத்தது எதையும் செய்திட முடியும் என இறுமாப்பு நிலைக்கு மீண்டும் மீண்டும் நம்மை இட்டுச் செல்வதே காலத்தின் பெரிய மாயை எனப்படுகிறது.
If a man is offered a fact which goes against his instincts, he will scrutinize it closely, and unless the evidence is overwhelming, he will refuse to believe it. If, on the other hand, he is offered something which affords a reason for acting in accordance to his instincts, he will accept it even on the slightest evidence.
-Bertrand Russell
கஷ்டப்படும் நேரங்களில் மட்டுமே சரணாகதி என்ற மனநிலைக்கு நம் மனம் முயல்கிறது. நமது நிலைமை சற்றே தெளிந்த பிறகு நமது மனம் மீண்டும் வேதாளமாகி ஒரு அகங்கார நிலைக்கு சென்றுவிடுவதை கூர்ந்து கவனிக்கும் போது, ஆண்டவா என்னை எப்பொழுதுமே உன்னுடைய அருளினால் தாங்க கூடிய கஷ்ட நிலையில் வைத்து இருப்பாயாக என வேண்டுவதே சரி எனப்படுகிறது. சவலை பிள்ளையின் மேலே அதிக பாசத்தை வைத்து இருக்கும் தாயை போல தன்னிடம் முழுமையான சரணாகதியை நாடும் எளிதான மனிதர்களின் மேலேயே இறைவன் கருணை கொள்கிறான்.
When financial stability is assured, spiritual bankruptcy is also assured.
ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா பகவத் கீதையில் காலத்தை தன்னுடைய பெரும் படைப்பாக பிரகடனப்படுத்துகிறார். சந்தேகமே இல்லை.
Thursday, January 14, 2010
காலத்தினாலான உதவி ...
இரண்டொரு நாட்களுக்கு முன் ஹைதியில் நடந்த பூகம்பத்தினால் ஏற்கனவே வறுமையான சூழ்நிலையில் வாழும் அந்நாட்டு மக்கள் இப்பொழுது மேலும் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் அம்மக்களுக்கு, தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் வாயிலாக நம்மால் மிகவும் சுலபமாக ஒரு நொடியில் உதவி செய்திட இயலும். இந்த நேரத்தில் நம்மால் இயன்ற உதவி சிறிதாக இருந்தாலும், பல்லாயிரம் மக்களின் கூட்டு முயற்சியினால் அது பெரு வெள்ளமாக மாறி மிக்க நன்றி பயக்கும்.
http://www.google.com/relief/haitiearthquake/
உதவி செய்ய பல ஊடகங்கள் இருப்பினும், இங்கே கொடுத்துள்ள சுட்டியின் மூலமாக மிகவும் எளிதாக நம்மால் இயன்ற உதவியை சடுதியில் செய்திட முடியும். வள்ளுவன் வாக்கின் படி
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது .
Thursday, January 7, 2010
படித்ததில் பிடித்தது
நெஞ்சு படபடக்கிறது
நீர் வீழ்ச்சி என்று
அருவியை யாரவது சொல்லிவிட்டால்
-விக்ரமாதித்யன்
அன்றைய அற்புதக் காட்சியாய்
சாலை மீது நின்றது ஒரு புல்
-தேவதேவன்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது
-பிரமிள்
நீர் வீழ்ச்சி என்று
அருவியை யாரவது சொல்லிவிட்டால்
-விக்ரமாதித்யன்
அன்றைய அற்புதக் காட்சியாய்
சாலை மீது நின்றது ஒரு புல்
-தேவதேவன்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது
-பிரமிள்
Subscribe to:
Comments (Atom)