Monday, December 28, 2009

வைகுண்ட ஏகாதசி - ஸ்ரீரங்கம்


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் திறப்பு .
புகைப்படம் : நன்றி தினமலர்

Thursday, December 24, 2009

Grace

Some time around 2000, I was, as I am still now, but as a much younger self, trying to find my way in Bangalore. Amma was assigned a training program in her office to Bangalore. She was glad for the first time to attend training as she could come and visit me. It was a wonderful week, when she came to my room in Malleswaram where I spent 6 lonely months with little comfort and lot of dreams. Suddenly we planned to arrange a trip to Sringeri and we got train tickets for people at home to Bangalore and our plan was to take a van from Bangalore. Everybody got excited and was very much looking forward for the day when we as a family would travel. It was a luxury then, because of the money involved and is still a luxury because of the time involved. Just the day when they were to start their journey to Bangalore, the day broke with the news that Rajkumar was abducted by Veerappan. I had no idea about who Rajkumar was and it became quite apparent that he was a somebody. The plan quickly unravelled as I developed cold feet and decided to call off the plan much to the bitter disappointment of everybody back home. I said to myself that it was for their safety that I had to do this. Looking back it is clear to me that I did not have the calling or the grace of the guru at that moment and it was not to be that day. I am still waiting for that day!

Back in 1988, when I was much much much younger, had clarity of thought and knew my way, I rather vividly remember playing one lazy saturday afternoon wearing a shorts and a near brownish cut baniyan which was originally white. Somehow I noticed that Appa who was talking with periappa minutes back, sneaked out with a rather neat veshti, shirt and jolna bag. I went out looking for him but could not find him. As I went to the end of the street I could notice that I saw someone looking like appa. I took off wearing the same dress to the bus stand to learn that appa was about to catch a bus to Kanchipuram to seek blessings of Periyava. I remember pestering him to take me and he threw me a gauntlet. If I could get back to the bus stand properly dressed and if he was still there, he would take me. There was no thinking on what to do, I zippped and zapped to be back in a moment. We went to Kanchi and had periyava dharisanam and visited Kamakshi amman temple in the dark. In the morning we had the blessing to have all 3 periava's dharisanam. I wanted to be in Kanchi to go to Ekambareshwarar and Varadarajar kovil, but Ramanand sagar's Ramayan beckoned for Appa and I was dragged back to Chennai to see the start of war with Ravana which sadly never materialized on that episode. Looking back it is clear to me that I had the calling or grace of guru that day. In my heart I feel I have been blessed to have seen Mahaperiyavaa at least once with my eyes.

While as much I savor the latter incident, I am still yearning for the day to visit Sringeri.

Wednesday, December 16, 2009

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்


ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிய தனியன்கள்

அன்னவயல் புதுவை ஆண்டாள் - அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதிகம்
இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை
பூமாலை சூடிக் கொடுத்தாளை சொல்லு

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே - தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடிநீ வேங்கடவற்கென்னை விதி என்றவிம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு

புகைப்படம் நன்றி - தினமலர்



Friday, August 21, 2009

இதுக்கு மேலே எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலே ...
நீ தான் காப்பத்தணும்

Tuesday, August 4, 2009

வேண்டுதல்

அம்மா தாயே காப்பாத்து !

Sunday, July 26, 2009

மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதி - 4


ஸ்ரீமத் ஸுந்தரநாயகீம் பயஹராம் ஞானப்ப்ரபாம் நிர்மலாம்
ச்யாமபாம் கமலாஸநார்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
வீணாவேணு ம்ருதங்கவாத்யா ரஸிகாம் நாநாவிதா டம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம்.

ஸ்ரீமத் ஸுந்தரநாயகீம் பயஹராம் ஞானப்ப்ரபாம் நிர்மலாம் --

மதுரையில் குடிகொண்டிருக்கும் சோமசுந்தரப்பெருமானுடைய இடப்பக்கத்தில் வீற்றிருக்கும் சுந்தரநாயகியானவள், பயத்தை சம்ஹாரம்செய்பவளுமாகவும், அப்பழுகற்றவளும், மெய்ஞானத்தை ப்ரகாஸிப்பவளுமாகவும் காட்சி தருகிறாள்.

ச்யாமபாம் கமலாஸநார்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்--

கரிய திருமேனியுடன் காட்சி தரும் தேவி, ப்ரஹ்ம்மன் போற்றும் திருவடியுடயவள், மற்றும், ஸ்ரீமன் நாராயணனின் பாத்திரத்திற்குரிய ஸஹோதரி.
திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், தன் சௌஜன்யம் மிக்க ஸஹோதரிக்கு பக்கத்தில் இருப்பதில் எந்த விசித்திரமும் இல்லை தான் !

வீணாவேணு ம்ருதங்கவாத்யா ரஸிகாம் நாநாவிதா டம்பிகாம் --

வீணை, புல்லாங்குழல், ம்ருதங்கம் முதலிய வாத்ய கானங்களை ரஸிப்பவளாகவும், பற்பல ஆடம்பரங்களையும் அணிந்து காட்சி அளிப்பவளும்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம்--

சமுத்திரத்தை போன்ற அளவிலா கருணையும் மங்களமும் கொண்ட அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியை நமஸ்கரிக்கிறேன்.

கற்றாவின் மனம் போல கசிந்துருக வேண்டுவனே !

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சர்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ.

Monday, May 4, 2009

மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதி - 3



ஸ்ரீ வித்யாம் ஸிவவாம பாக நிலையாம் - ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீ சக்ராங்கித பிந்துமத்ய வசதீம் - ஸ்ரீமத் ஸபாநாயஹீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் - ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம்.



தேவியின் அளவற்ற ஆற்றலையும் அதிசியத்தையும் போற்றிய ஆச்சர்யாளின் பக்தியையும் ஞானத்தயும் கற்பனை கூட செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ள நான் இந்த காரியம் எவ்வளவு கடினமானது என்பதை இப்பொழுது உணர்ந்துகொள்கிறேன். ஆச்சர்யாள் தேவியின் சௌந்தர்யத்தை மந்த்ர ஸ்வரூபமாய் வருணிக்கிறார். ஆச்சர்யாளின் அநுக்ரகத்தையும் தேவியின் கருணையையும் மட்டுமே நம்பி இந்த ஸ்லோகத்திற்கு என்னால் இயன்ற அளவிற்கு பதப்பொருளை தருகிறேன்.

ஸ்ரீ வித்யாம் ஸிவவாம பாக நிலையாம் -- வித்யா ஸ்வரூபமாகவும், ஈசனின் இடது பாகத்தையும் அலங்கரித்து காட்சியளிக்கிறாள்

ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம் - ஹ்ரீம் என்னும் மந்திரத்தை ஆட்கொண்டு பிரகாசிக்கிறாள்

ஹ்ரீம் என்னும் மந்திரத்துக்கு ஆழ்ந்த பொருள் விளக்கம் உள்ளது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக விளங்கும் ஜகத் ஜனனியின் சக்தியை குறிக்கும் மந்திரமாக இது கூறப்படுகிறது.

ஸ்ரீ சக்ராங்கித பிந்துமத்ய வசதீம் -

ஸ்ரீ சக்ராங்கித - ஸ்ரீ சக்ரத்தின் , பிந்து - துளி , வசதீம் - வாசம் செய்பவள்

காஞ்சி பெரியவாளுடைய தெய்வத்தின் குரல் ஆறாம் பாகத்தில் சௌந்த்ர்யலஹரி ஸ்தோத்திரத்திர்க்கு அருளுரை கூறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அதனை படித்து இந்த மந்த்ரங்களுக்கு பெரியவாளுடைய கருத்துகளை பதிவு செய்கிறேன்.

The true understanding of the form of manthras is beyond my means . In my opinion, it could be realized under the guidance of the guru and aathma sadhana, not by pedantic undertaking.

ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் - ஸ்ரீ ஷண்முக பெருமானுக்கும், ஸ்ரீ விக்னேஸ்வர பெருமானுக்கும் தாயானவள்

ஸ்ரீமத் ஜகாந்மோஹிநீம் --- இந்த ஜகத்தின் ஸ்ருஷ்டியையும் மாயையையும் ஆட்கொண்டு ஜகன் மோகினியாகவும் திகழ்கிறாள்.

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் --சமுத்திரத்தை போன்ற அளவிலா கருணையும் மங்களமும் கொண்ட அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியை நமஸ்கரிக்கிறேன்

மந்திர ஸ்வரூபமாக தாயாரை வருணிக்கும் ஆச்சர்யாளின் ஞானத்தை புரிந்து கொள்ளும் தகுதி எனக்கு இல்லை. குருவின் பூரண அனுக்ரஹத்தை பெற்று கொண்டு இதன் தத்வார்த்த சாதனத்தை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே !

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சர்ய தேவோ பவ

Saturday, May 2, 2009

மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதி - 2



முக்தாஹார லஸத்கிரீட ருசிராம் -பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்ஜ்ந்நுபூர கிங்கீணீம் மணிதராம் - பத்மபிரபா பாசுராம்
ஸர்வாபீஷ்டபலப்ரதாம் கிரிஸுதாம் -- வாணி ரமாஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் !!

முக்தாஹார லஸத்கிரீட ருசிராம் - நல்முத்தினாலான மாலையையும், கிரீடத்தையும் அணிந்து காட்சி அளிப்பவள்

பூர்ணேந்து - பூரண சந்திரன், வக்த்ர - திருமுகம், ப்ரபாம் - பிரகாசம்

பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம் - தாயாரின் திருமுகம் பூரண சந்திரனை போன்ற பிரகாசமான சாந்தத்தை பொழிகின்றது.

நூபுரம் - சிலம்பை போன்ற அணிகலன், கிங்கீணீ - கால் சலங்கையில் பதிக்கப்பட்டு சிறிய ஒலியை எழுப்பும் கற்கள்/மணிகள்.

சிஞ்ஜ்ந்நுபூர கிங்கீணீம் மணிதராம் - சிஞ்சன ( நவ ரத்தினங்களை போன்ற ஒருவகையான மணி ) மணிகள் பொருந்தி பிரகாசிக்க கூடிய கால் சிலம்பை அணிந்து காட்சியளிப்பவள். ஒரு சிறிய இடைசெருகல் - திருமாலிருஞ்சோலை இல் உள்ள நூபுரகங்கை தீர்த்தம் ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களில் உள்ள சிலம்பை போன்ற அணிகலனில் ( நூபுரம்) இருந்து தோன்றியதால் அது நூபுரகங்கை என்று அழைக்கப்படுகிறது.

பத்மபிரபா பாசுராம் - அன்றலர்ந்த செந்தமரைப்பூவை போன்று பிரகாசத்தை உடையவள்

ஸர்வாபீஷ்டபலப்ரதாம் - பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றி அதன் பலனை தருபவள்

கிரிஸுதாம் - தாயாரின் பல நாமகரணங்களில் எனக்கு பிடித்தமான ஒன்று. மலையத்வஜ பாண்டியனின் மகள் - (ஸுதா) - கிரிஸுதா - ஹிமகிரிசுதா - கிரிஜா - என பல நாமகரணங்கள் தாயாரை குறிக்கின்றன. இந்த சொற்பதருக்கு பல விதங்களில் பொருள் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அந்த தெரியப்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

அபிராம பட்டர்பிரான், அந்தாதியில் அழகுடன் மலை மகளே என்று வருணிக்கிறார்.

வாணி - கலைமகள், சரஸ்வதி, ரமா - லக்ஷ்மி தேவி - ஸேவிதாம் - ஸேவிக்கப்படுபவள்.

வாணி ரமாஸேவிதாம் - சரஸ்வதி-லக்ஷ்மி தேவியரால் ஸேவிக்கப்படுபவள்.

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் --சமுத்திரத்தை போன்ற அளவிலா கருணையும் மங்களமும் கொண்ட அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியை நமஸ்கரிக்கிறேன்

முந்தைய பதிவில் தெரிவித்தபடி, மேற்கண்ட பதிவில் என் அறிவிற்கு எட்டியதை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருளி, பின்னூட்டங்களில் தெரியப்படுத்துமாறு வேண்டி கொள்கிறேன்

அடியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

மாத்ரு தேவோ பவ !! பித்ரு தேவோ பவ!! ஆச்சர்ய தேவோ பவ !!




Thursday, April 30, 2009

மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதி - 1



உத்யத் பானு ஸஹஸ்ர கோடி சத்ருஷாம் - கேயுர ஹாரோஜ்வலாம்
பிம்போஷடீம் ஸ்மிததந்த பந்க்திருசிராம் பீதம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரஹ்ம ஸுரேந்திர சேவித பதாம் - தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் !!

தாயாருடைய தேஜஸை பற்றி ஸம்ஸ்க்ரித பாஷையில் ஆதி ஷங்கர பகவத் பாதாள் அருளும் முதல் சொற்பதம் -- உத்யத் பானு -- அதாவது உதிக்கின்ற சூரியன்.

திருக்கடையூர் அபிராம பட்டர் அபிராமி அந்தாதியில் தாயரை போற்றி தொடங்கும் முதல் தமிழ் வார்த்தை -- உதிக்கின்ற செங்கதிர். தாயாரின் பூரண கடாக்ஷத்தை பெற்ற அடியோர்கள் மனதில் அவள் ஒரே ரூபசௌந்தர்யத்தில் காட்சி அளிப்பதை அதிசயம் என்பதை தவிர வேறு எப்படி புரிந்து கொள்ள முடியும்? பட்டர் பிரான் சொல்வது போல சந்தேகமே இல்லாமல் அவள் "அதிசயமான வடிவுடையவள் " தான் !!

உத்யத் பானு ஸஹஸ்ர கோடி சத்ருஷாம்
ஆயிரம் கோடி உதிக்கின்ற சூரியனை போன்ற பிரகாசத்தை உடையவள்

கேயுர ஹாரோஜ்வலாம்
கேயுர ஹாரம் - மேல் கையில், அதாவது தோளுக்கு பக்கத்தில் அணியும் அணிகலன். கேயுரஹாரத்தை அணிந்து அலங்கரிப்பவள்.

பிம்போஷடீம் - பிம்பா பழம் - தமிழில் - கொவ்வை பழம் - போன்ற சிவந்த உதடுகள்
ஸ்மிததந்த பந்க்திருசிராம் - வெள்ளை புன்முறுவல் ( ஸ்மித - புன்சிரிப்பு ) கொண்டவள் .
பீதம்பராலங்க்ருதாம் - தங்க பட்டாடை அணிந்து அலங்கரிப்பவள்.

விஷ்ணு ப்ரஹ்ம ஸுரேந்திர சேவித பதாம் - தத்வ ஸ்வரூபாம் சிவாம் --
விஷ்ணு , ப்ரஹ்மா , இந்திரன் போன்ற தேவாதி தேவர்களும் கடவுள்களும் போற்றும் தத்வ - ஸ்வரூபம் ஆனவள் - சிவனின் பாதியனவள்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் --சமுத்திரத்தை போன்ற அளவிலா கருணையும் மங்களமும் கொண்ட அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியை நமஸ்கரிக்கிறேன்

இந்த பதிவை எழுதிய பின் இன்றைய தினம் ஷங்கர ஜெயந்தி என்பதை அறிந்து மனம் உவகை கொள்கிறது. வெகு சீக்கிரம் தாயாரை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்க பிரார்த்தனை செய்து விடை பெறுகிறேன். மேற்கண்ட பதிவில் என் அறிவிற்கு எட்டியதை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருளி, பின்னூட்டங்களில் தெரியப்படுத்துமாறு வேண்டி கொள்கிறேன்.


மாத்ரு தேவோ பவ , பித்ரு தேவோ பவ, ஆச்சர்ய தேவோ பவ.

Monday, April 20, 2009

தாயார் திருவடி சரணம்

இனி என்னை புதிய உயிராக்கி - மதி தன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்!

சில நாட்களுக்கு முன்பு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக இனிதே நடைபெற்றது. இது வரை அந்த காட்சியே காண சித்தம் பிறக்கவில்லை. மதுரையில் பிறந்திருந்தாலும் தாயாரை போற்றி எந்த ஒரு ஸ்லோகமும் இதுவரை எனக்கு தெரியாமல் இருப்பதை சரி செய்ய எனக்கு இப்பொழுது ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்து உள்ளது. ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் அனுக்ரகம் செய்த ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்துதியை கற்று கொள்ள வேண்டும் என்ற எனது நீண்ட ஆவலை பதிவு செய்ய மனம் விழைகிறது. மதுரை கல்லூரி மேல் நிலை பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு பயின்ற காலங்களில் காலை இறை வணக்கம் நரசிம்ஹன் என்ற எனது நண்பனால் பள்ளிகூட விளையாட்டு மைதானத்தில் உரக்க சொல்லப்படும். முதல் வணக்கம் ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதியின் " உத்யத்பானு என்று ஆரம்பிக்கும் சுலோகம், பிறகு தமிழ் தாய் வாழ்த்து அதை தொடர்ந்து தேசிய கீதம். இன்றளவும் எனக்கு அந்த முதல் ஸ்லோகத்தை தவிர்த்து பிற ஸ்லோகங்கள் தெரியாது. வருகின்ற நாட்களில் ராமாயணத்து அணிலை போன்று என் சிற்றறிவிற்கு எட்டும் அளவிற்கு தாயாரின் ஸ்லோகங்களை கற்று, அதன் பத பொருளை இங்கு எழுத முயற்சி செய்கிறேன். ஆதி குரு அனுக்ரகம் செய்த இந்த மந்திரத்தின் அற பொருளை அடியேனுக்கு உணர்த்திட அந்த ஜகன் மாதாவை பிரார்த்திக்கிறேன்.மேலும் மதுரை கோவிலின் பெருமைகளை பற்றி பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையும் இங்கே தொகுத்து வழங்கவிருக்கிறேன்.

http://frontlineonnet.com/fl2608/stories/20090424260812300.htm

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சர்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ.