Monday, May 4, 2009

மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதி - 3



ஸ்ரீ வித்யாம் ஸிவவாம பாக நிலையாம் - ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீ சக்ராங்கித பிந்துமத்ய வசதீம் - ஸ்ரீமத் ஸபாநாயஹீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் - ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம்.



தேவியின் அளவற்ற ஆற்றலையும் அதிசியத்தையும் போற்றிய ஆச்சர்யாளின் பக்தியையும் ஞானத்தயும் கற்பனை கூட செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ள நான் இந்த காரியம் எவ்வளவு கடினமானது என்பதை இப்பொழுது உணர்ந்துகொள்கிறேன். ஆச்சர்யாள் தேவியின் சௌந்தர்யத்தை மந்த்ர ஸ்வரூபமாய் வருணிக்கிறார். ஆச்சர்யாளின் அநுக்ரகத்தையும் தேவியின் கருணையையும் மட்டுமே நம்பி இந்த ஸ்லோகத்திற்கு என்னால் இயன்ற அளவிற்கு பதப்பொருளை தருகிறேன்.

ஸ்ரீ வித்யாம் ஸிவவாம பாக நிலையாம் -- வித்யா ஸ்வரூபமாகவும், ஈசனின் இடது பாகத்தையும் அலங்கரித்து காட்சியளிக்கிறாள்

ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம் - ஹ்ரீம் என்னும் மந்திரத்தை ஆட்கொண்டு பிரகாசிக்கிறாள்

ஹ்ரீம் என்னும் மந்திரத்துக்கு ஆழ்ந்த பொருள் விளக்கம் உள்ளது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக விளங்கும் ஜகத் ஜனனியின் சக்தியை குறிக்கும் மந்திரமாக இது கூறப்படுகிறது.

ஸ்ரீ சக்ராங்கித பிந்துமத்ய வசதீம் -

ஸ்ரீ சக்ராங்கித - ஸ்ரீ சக்ரத்தின் , பிந்து - துளி , வசதீம் - வாசம் செய்பவள்

காஞ்சி பெரியவாளுடைய தெய்வத்தின் குரல் ஆறாம் பாகத்தில் சௌந்த்ர்யலஹரி ஸ்தோத்திரத்திர்க்கு அருளுரை கூறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அதனை படித்து இந்த மந்த்ரங்களுக்கு பெரியவாளுடைய கருத்துகளை பதிவு செய்கிறேன்.

The true understanding of the form of manthras is beyond my means . In my opinion, it could be realized under the guidance of the guru and aathma sadhana, not by pedantic undertaking.

ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் - ஸ்ரீ ஷண்முக பெருமானுக்கும், ஸ்ரீ விக்னேஸ்வர பெருமானுக்கும் தாயானவள்

ஸ்ரீமத் ஜகாந்மோஹிநீம் --- இந்த ஜகத்தின் ஸ்ருஷ்டியையும் மாயையையும் ஆட்கொண்டு ஜகன் மோகினியாகவும் திகழ்கிறாள்.

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் --சமுத்திரத்தை போன்ற அளவிலா கருணையும் மங்களமும் கொண்ட அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியை நமஸ்கரிக்கிறேன்

மந்திர ஸ்வரூபமாக தாயாரை வருணிக்கும் ஆச்சர்யாளின் ஞானத்தை புரிந்து கொள்ளும் தகுதி எனக்கு இல்லை. குருவின் பூரண அனுக்ரஹத்தை பெற்று கொண்டு இதன் தத்வார்த்த சாதனத்தை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே !

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சர்ய தேவோ பவ

No comments:

Post a Comment