முக்தாஹார லஸத்கிரீட ருசிராம் -பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்ஜ்ந்நுபூர கிங்கீணீம் மணிதராம் - பத்மபிரபா பாசுராம்
ஸர்வாபீஷ்டபலப்ரதாம் கிரிஸுதாம் -- வாணி ரமாஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் !!
முக்தாஹார லஸத்கிரீட ருசிராம் - நல்முத்தினாலான மாலையையும், கிரீடத்தையும் அணிந்து காட்சி அளிப்பவள்
பூர்ணேந்து - பூரண சந்திரன், வக்த்ர - திருமுகம், ப்ரபாம் - பிரகாசம்
பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம் - தாயாரின் திருமுகம் பூரண சந்திரனை போன்ற பிரகாசமான சாந்தத்தை பொழிகின்றது.
நூபுரம் - சிலம்பை போன்ற அணிகலன், கிங்கீணீ - கால் சலங்கையில் பதிக்கப்பட்டு சிறிய ஒலியை எழுப்பும் கற்கள்/மணிகள்.
சிஞ்ஜ்ந்நுபூர கிங்கீணீம் மணிதராம் - சிஞ்சன ( நவ ரத்தினங்களை போன்ற ஒருவகையான மணி ) மணிகள் பொருந்தி பிரகாசிக்க கூடிய கால் சிலம்பை அணிந்து காட்சியளிப்பவள். ஒரு சிறிய இடைசெருகல் - திருமாலிருஞ்சோலை இல் உள்ள நூபுரகங்கை தீர்த்தம் ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களில் உள்ள சிலம்பை போன்ற அணிகலனில் ( நூபுரம்) இருந்து தோன்றியதால் அது நூபுரகங்கை என்று அழைக்கப்படுகிறது.
பத்மபிரபா பாசுராம் - அன்றலர்ந்த செந்தமரைப்பூவை போன்று பிரகாசத்தை உடையவள்
ஸர்வாபீஷ்டபலப்ரதாம் - பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றி அதன் பலனை தருபவள்
கிரிஸுதாம் - தாயாரின் பல நாமகரணங்களில் எனக்கு பிடித்தமான ஒன்று. மலையத்வஜ பாண்டியனின் மகள் - (ஸுதா) - கிரிஸுதா - ஹிமகிரிசுதா - கிரிஜா - என பல நாமகரணங்கள் தாயாரை குறிக்கின்றன. இந்த சொற்பதருக்கு பல விதங்களில் பொருள் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அந்த தெரியப்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
அபிராம பட்டர்பிரான், அந்தாதியில் அழகுடன் மலை மகளே என்று வருணிக்கிறார்.
வாணி - கலைமகள், சரஸ்வதி, ரமா - லக்ஷ்மி தேவி - ஸேவிதாம் - ஸேவிக்கப்படுபவள்.
வாணி ரமாஸேவிதாம் - சரஸ்வதி-லக்ஷ்மி தேவியரால் ஸேவிக்கப்படுபவள்.
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் --சமுத்திரத்தை போன்ற அளவிலா கருணையும் மங்களமும் கொண்ட அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியை நமஸ்கரிக்கிறேன்
முந்தைய பதிவில் தெரிவித்தபடி, மேற்கண்ட பதிவில் என் அறிவிற்கு எட்டியதை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருளி, பின்னூட்டங்களில் தெரியப்படுத்துமாறு வேண்டி கொள்கிறேன்
அடியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.
மாத்ரு தேவோ பவ !! பித்ரு தேவோ பவ!! ஆச்சர்ய தேவோ பவ !!
No comments:
Post a Comment