Monday, April 20, 2009

தாயார் திருவடி சரணம்

இனி என்னை புதிய உயிராக்கி - மதி தன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்!

சில நாட்களுக்கு முன்பு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக இனிதே நடைபெற்றது. இது வரை அந்த காட்சியே காண சித்தம் பிறக்கவில்லை. மதுரையில் பிறந்திருந்தாலும் தாயாரை போற்றி எந்த ஒரு ஸ்லோகமும் இதுவரை எனக்கு தெரியாமல் இருப்பதை சரி செய்ய எனக்கு இப்பொழுது ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்து உள்ளது. ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் அனுக்ரகம் செய்த ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்துதியை கற்று கொள்ள வேண்டும் என்ற எனது நீண்ட ஆவலை பதிவு செய்ய மனம் விழைகிறது. மதுரை கல்லூரி மேல் நிலை பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு பயின்ற காலங்களில் காலை இறை வணக்கம் நரசிம்ஹன் என்ற எனது நண்பனால் பள்ளிகூட விளையாட்டு மைதானத்தில் உரக்க சொல்லப்படும். முதல் வணக்கம் ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதியின் " உத்யத்பானு என்று ஆரம்பிக்கும் சுலோகம், பிறகு தமிழ் தாய் வாழ்த்து அதை தொடர்ந்து தேசிய கீதம். இன்றளவும் எனக்கு அந்த முதல் ஸ்லோகத்தை தவிர்த்து பிற ஸ்லோகங்கள் தெரியாது. வருகின்ற நாட்களில் ராமாயணத்து அணிலை போன்று என் சிற்றறிவிற்கு எட்டும் அளவிற்கு தாயாரின் ஸ்லோகங்களை கற்று, அதன் பத பொருளை இங்கு எழுத முயற்சி செய்கிறேன். ஆதி குரு அனுக்ரகம் செய்த இந்த மந்திரத்தின் அற பொருளை அடியேனுக்கு உணர்த்திட அந்த ஜகன் மாதாவை பிரார்த்திக்கிறேன்.மேலும் மதுரை கோவிலின் பெருமைகளை பற்றி பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையும் இங்கே தொகுத்து வழங்கவிருக்கிறேன்.

http://frontlineonnet.com/fl2608/stories/20090424260812300.htm

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சர்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ.

No comments:

Post a Comment