Thursday, January 21, 2010
நேரம்...காலம்
சில நேரங்களில் வரும் சிறு கஷ்டங்கள் கூட நமக்கு பெரும் துயரம் போல தெரிகிறது. கஷ்டம் வரும் நேரங்களில் இந்த உலகம் நமக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தி விட்டது போலவும் , சந்தோஷம் வரும் நேரத்தில் நாம் அதற்காக பெரிதும் முயற்சித்து அது நமக்கு கிடைத்ததில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லாதது போலவும் தோன்றுகிறது. நம்மால் நினைத்தது எதையும் செய்திட முடியும் என இறுமாப்பு நிலைக்கு மீண்டும் மீண்டும் நம்மை இட்டுச் செல்வதே காலத்தின் பெரிய மாயை எனப்படுகிறது.
If a man is offered a fact which goes against his instincts, he will scrutinize it closely, and unless the evidence is overwhelming, he will refuse to believe it. If, on the other hand, he is offered something which affords a reason for acting in accordance to his instincts, he will accept it even on the slightest evidence.
-Bertrand Russell
கஷ்டப்படும் நேரங்களில் மட்டுமே சரணாகதி என்ற மனநிலைக்கு நம் மனம் முயல்கிறது. நமது நிலைமை சற்றே தெளிந்த பிறகு நமது மனம் மீண்டும் வேதாளமாகி ஒரு அகங்கார நிலைக்கு சென்றுவிடுவதை கூர்ந்து கவனிக்கும் போது, ஆண்டவா என்னை எப்பொழுதுமே உன்னுடைய அருளினால் தாங்க கூடிய கஷ்ட நிலையில் வைத்து இருப்பாயாக என வேண்டுவதே சரி எனப்படுகிறது. சவலை பிள்ளையின் மேலே அதிக பாசத்தை வைத்து இருக்கும் தாயை போல தன்னிடம் முழுமையான சரணாகதியை நாடும் எளிதான மனிதர்களின் மேலேயே இறைவன் கருணை கொள்கிறான்.
When financial stability is assured, spiritual bankruptcy is also assured.
ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா பகவத் கீதையில் காலத்தை தன்னுடைய பெரும் படைப்பாக பிரகடனப்படுத்துகிறார். சந்தேகமே இல்லை.
Thursday, January 14, 2010
காலத்தினாலான உதவி ...
இரண்டொரு நாட்களுக்கு முன் ஹைதியில் நடந்த பூகம்பத்தினால் ஏற்கனவே வறுமையான சூழ்நிலையில் வாழும் அந்நாட்டு மக்கள் இப்பொழுது மேலும் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் அம்மக்களுக்கு, தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் வாயிலாக நம்மால் மிகவும் சுலபமாக ஒரு நொடியில் உதவி செய்திட இயலும். இந்த நேரத்தில் நம்மால் இயன்ற உதவி சிறிதாக இருந்தாலும், பல்லாயிரம் மக்களின் கூட்டு முயற்சியினால் அது பெரு வெள்ளமாக மாறி மிக்க நன்றி பயக்கும்.
http://www.google.com/relief/haitiearthquake/
உதவி செய்ய பல ஊடகங்கள் இருப்பினும், இங்கே கொடுத்துள்ள சுட்டியின் மூலமாக மிகவும் எளிதாக நம்மால் இயன்ற உதவியை சடுதியில் செய்திட முடியும். வள்ளுவன் வாக்கின் படி
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது .
Thursday, January 7, 2010
படித்ததில் பிடித்தது
நெஞ்சு படபடக்கிறது
நீர் வீழ்ச்சி என்று
அருவியை யாரவது சொல்லிவிட்டால்
-விக்ரமாதித்யன்
அன்றைய அற்புதக் காட்சியாய்
சாலை மீது நின்றது ஒரு புல்
-தேவதேவன்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது
-பிரமிள்
நீர் வீழ்ச்சி என்று
அருவியை யாரவது சொல்லிவிட்டால்
-விக்ரமாதித்யன்
அன்றைய அற்புதக் காட்சியாய்
சாலை மீது நின்றது ஒரு புல்
-தேவதேவன்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது
-பிரமிள்
Subscribe to:
Comments (Atom)